மட்டு வைத்தியசாலைக்கு ஒரு‌தொகை பால் பக்கற்றுக்கள் ஹெல்ப் எவர் அமைப்பினால் அன்பளிப்பு.....................

 மட்டு வைத்தியசாலைக்கு ஒரு‌தொகை பால் பக்கற்றுக்கள் ஹெல்ப் எவர் அமைப்பினால் அன்பளிப்பு.....................

உலக குருதிக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தக் கொடையாளர்களிற்கு வழங்குவதற்காக ஒரு தொகைப் பால் பக்கற்றுக்கள் ஹெல்ப் எவர் அமைப்பினரால் வழங்கி வைக்கப்பட்டது. 

 மட்டு இரத்த வங்கியின் வேண்டுகோளிற்கிணங்க வைத்தியசாலைக்கு வருகை தந்து குருதி கொடை அளிப்பவர்களின் தாகம் தீர்க்கும் உன்னத நோக்கில் ஒரு தொகை  உணவுப் பொதிகள் ஹெல்ப் எவர் அமைப்பினால்   இரத்த வங்கி பொறுப்பதிகாரர்களிடம்  கையளிக்கப்பட்டது

Comments