காரைதீவில் மற்றுமோர் சோகம்: பாணமை கடலில் தவறி விழுந்து வைத்தியர் உயிரிழப்பு...............

 காரைதீவில் மற்றுமோர் சோகம்: பாணமை கடலில் தவறி விழுந்து வைத்தியர் உயிரிழப்பு...............

காரைதீவை சொந்த இடமாக கொண்ட வைத்திய கலாநிதி இ.தக்சிதன் உகந்தைமலை முருகன் ஆலயத்தில் இருந்து வருகின்ற வழியில் பாணமை கடலில் தவறி விழுந்து  சனிக்கிழமை இரவு இறந்துள்ளார்.

இவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வந்தவர். கணித பாட முன்னாள் உதவி பணிப்பாளர் எஸ்.இலங்கநாதனின் மூத்த புதல்வன் ஆவார்.

இவருடைய சடலம் மரண பரிசோதனைக்காக பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் எஸ். அக்சயன் லகுகல கடலில் தவறி விழுந்து இறந்த சோகத்தில் இருந்து மீளாத காரைதீவு மக்களுக்கு மற்றுமோர் பேரிழப்பை இந்த வைத்தியரின் இழப்பு ஏற்படுத்தியுள்ளது.

Comments