மட்டக்களப்பில் எஸ்கோ நிறுவனத்தினரினால் தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு..............
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் அவர்களினால் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு பழைய மாவட்ட செயலக வளாகத்தில் (12) இடம்பெற்றது.மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக மாவட்ட அரசாங்க அதிபரின் வேண்டு கோளுக்கு அமைவாக எஸ்கோ நிறுவனப் பணிப்பாளர் ஸ்பிரித்தியோன் இப் புதிய தையல் இயந்திரங்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
எஸ்கோ நிறுவனமானது கடந்த காலங்களில் மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்தல், பாதுகாப்பான புலம்பெயர்தலை உறுதிப்படுத்தல், பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள முன்பள்ளி சிறார்களுக்கான கல்வி வழங்கல், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களை வலுவூட்டல் போன்ற செயற் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் எஸ்கோ நிறுவன உதவிப் பணிப்பாளர் கோதைநாயகி, திட்ட இணைப்பாளர் எஸ்.\உதயேந்திரன் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment