'தமிழரின் கலையும் கலாசாரமும்' என்ற தொனிப்பொருளில், கிழக்குப்பல்கலைக்கழகத்தில் சர்வதேச தமிழ் மாநாடு..............

 'தமிழரின் கலையும் கலாசாரமும்' என்ற தொனிப்பொருளில், கிழக்குப்பல்கலைக்கழகத்தில் சர்வதேச தமிழ் மாநாடு..............

'தமிழரின் கலையும் கலாசாரமும்' என்ற தொனிப்பொருளில், கிழக்குப் பல்கழலக்கழகத்தில் சர்வதேச தமிழ் மாநாடு இன்று (13) சிறப்பாக இடம்பெற்றது. கிழக்குப் பல்கலைக்கழகமானது வவுனியா பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றோடு இணைந்து இந்த மாநாட்டினை நடாத்தியது.

இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த, தமிழ் ஆய்வாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொண்டிருந்தனர். இம்மாநாட்டில், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் சந்தன உடவத்த பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்ததுடன், சென்னையைச் சேர்ந்தவரும் உலக தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான வி.ஜீ.சந்தோசம், இலங்கைக்கான முன்னாள் யாழ் இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் உட்படப் கிழக்கு பல்கலைக்கழக, வவுனியா பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் உப வேந்தர்களும் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர். இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் வரலாற்று நூல்கள் தொடர்பான ஆவணப்படமும் வெளியிடப்பட்டது.

Comments