மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் விபத்து: ஒருவர் மரணம் மற்றுமொருவர் காயம்.................

 மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில்  விபத்து: ஒருவர் மரணம் மற்றுமொருவர் காயம்.................

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடத்தில் சனிக்கிழமை (01.06.2024) மாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஸ்த்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றுமாருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதானவும் களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தார்.

இதில் உயிரிழந்தவர் களுவதாளைக் கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுடைய திவாகரன் ஹபிசாயன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது...

கிரான்குளம் பகுதியிலிருந்து இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் களுதாவளை நோக்கிச் சென்றுள்ளனர். மிகவும் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடம் வளைவு பகுதியில் வைத்து எதிரேயிருந்த மின்கம்பத்தில் மேதியுள்ளது. இதில் பயணித்த ஒருவர் ஸ்த்லத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றய நபர் பலத்த பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்தவர் களுவாஞ்சிகுடி ஆதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.

இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ள இந்நிலையில் ஸ்த்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Comments