கரும்பலகை நாவல் மற்றும் சிறுகதை மஞ்சரி 50வது இதழ் நூல் வெளியீட்டு நிகழ்வு..................

 கரும்பலகை நாவல் மற்றும் சிறுகதை மஞ்சரி 50வது இதழ் நூல் வெளியீட்டு நிகழ்வு..................

 (வரதன்) மகுடம் பதிப்பகம் நடத்தும் நூலாசிரியர் மூ.தயாளனின் கரும்பலகை நாவல் மற்றும் சிறுகதை மஞ்சரி 50வது இதழ் வெளியீட்டு விழா நிகழ்வு இன்று (15) மட்டக்களப்பு YMCA மண்டபத்தில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் A. நவரட்ணம் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.

இவ் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரா.முரளீஸ்வரன் கலந்து கொண்டார்.

நூலின் முதல் பிரதியை பிரதம அதிதியான மூ.தயாளன் அவர்கட்கு நூலாசிரியர் வழங்கி வைத்ததுடன், மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி அவர்களால் நூல் பிரதிகள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டவர்கழக்கு வழங்கி வைக்கப்பட்டது.

  இவ் நூலின் அறிமுக உரையை இலக்கிய விமசாகர் ரா.சிவலிங்கம்  வழங்கி வைத்ததுடன், சிறுகதை மஞ்சரி உரை விமர்சன உரையை எழுத்தாளர் சா. மணி சேகரன்   வழங்கி வைத்தார்.

 சிறப்பு அதிதியாக தனியார் போக்குவரத்து முகாமையாளர் ருத்ரமூர்த்தி யுவநாதன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். இலக்கிய வாதிகள், விரிவுரையாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.






Comments