செலான் வங்கியின் 36வது ஆண்டு நிறைவையொட்டி: மட்டு இந்து கல்லூரியில் நூலகம் திறந்து வைப்பு...............

 செலான் வங்கியின் 36வது ஆண்டு நிறைவையொட்டி: மட்டு இந்து கல்லூரியில் நூலகம் திறந்து வைப்பு...............

செலான் வங்கியின் 36வது ஆண்டு நிறைவையொட்டி மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் நூலகம் மீள் புனரமைப்பு செய்யப்பட்டு இன்று (20) திறந்து வைக்கப்பட்டது.

இந்துக்கல்லூரியின் அதிபர் K.பகீரதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு செலான் வங்கி கிளை முகாமையாளர் பிரேமினி மோகன்ராஜ், கிழக்கு பிராந்திய கடன் பிரிவு அதிகாரி சுகன்யா கமலரூபன், கிழக்கு பிராந்திய செயற்பாட்டு முகாமையாளர் பத்மஸ்ரீ இளங்கோ, காத்தான்குடி கிளை முகாமையாளர் வெலிங்டன் லக்ஷ்மன், செங்கலடி கிளை முகாமையாளர் கோபிநாத், மட்டக்களப்பு கல்வி வலய உதவி கல்வி பணிப்பாளர் ஹரிஹரராஜ் உட்பட பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

செலான் வங்கி தனது 36-வது ஆண்டு நிறைவையொட்டி செலான் பெஹசர திட்டத்தின் மற்றுமொரு மைல் கல்லை எட்டும் நிலையில் நாட்டின் இளைய சமுதாயத்தை ஊக்குவிப்பதிலும் கற்றல் கலாசாரத்தை வளர்ப்பதிலும் வங்கி தொடர்ச்சியான பணியினை முன்னெடுத்து வருகின்றது.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நாடளாவிய ரீதியில் நூலகங்களின் எண்ணிக்கையை 300 ஆக உயர்த்தி செலான் வங்கி சிறுவர்களின் திறனை தொடர்ந்து வெளிக்கொண்டு வருவதுடன், வரும் தலைமுறைகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கிற செயல்பாட்டின் ஒரு செயல்பாடாக இலங்கை முழுவதும் உதவி தேவைப்படும் பாடசாலைகளில் செலான் வங்கியின் கூட்டான்மை சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் புதிய நூலகங்கள் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்படுகின்றது. இதன் போது மாணவர்களுக்கான கணனி, ப்ரொஜெக்டர், புத்தகங்கள் என்பன கையளிக்கப்பட்டன.

Comments