மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தல 224 வது வருடாந்த திருவிழா ....................

 மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தல 224 வது வருடாந்த திருவிழா ....................

(க.டினேஸ்) மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் புனித அந்தோனியார் திருத்தல திருவிழா திருப்பலியானது 13.06.2024 வியாழக்கிழமை காலை 7:00மணிக்கு பங்குத்தந்தை அருட்தந்தை நிக்கலஸ் யூட் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.
கடந்த 9 நாட்கள் மாலை வழிபாடுகள் இறைமக்களை தயார்படுத்தும் வண்ணம் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கருப்பொருளை மையப்படுத்தியதாக இறைமக்களுக்கு சிந்தனைகள் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து புதன்கிழமை மாலை வேஸ்பர் நற்கருணை ஆராதனை வழிபாடும் இடம் பெற்றது.
திருவிழா திருப்பலியினை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை, செங்கலடி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை A.தேவதாசன் அடிகளார் தலைமைதாங்கி பங்குத்தந்தை நிக்கலஸ் யூட் அடிகளாரும் இணைந்து திருப்பலியினை ஒப்புக்கொடுத்து இறைவேண்டுதல் செய்திருந்தார்கள். இவ் வழிபாட்டில் அருட்தந்தையர்களும், அருட்சகோதரர்களும், அருட்சகோதரிகளும் கலந்துகொண்டனர்.
திருப்பலி நிறைவில் புனித அந்தோனியார் திருச்சுருப பவனியானது ஆலயத்தை சுற்றி எடுத்துவரப்பட்டதுடன், புனித அந்தோனியார் புகழ்பாக்கள் இசைக்கப்பட்டு கவிகள் இசைக்கப்பட்டு இறுதி செபத்துடன் புனித அந்தோனியார் திருச்சுருப ஆசீரை பங்குத்தந்தை அருட்பணி நிக்கலஸ் யூட் அடிகளார் இறைமக்களுக்கு வழங்கி வைத்தார்.











Comments