புதிய மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் 09.06.2024ல்....
மட்டக்களப்பின் புதிய மாவட்ட செயலக வளாகத்தில் ஸ்தாபிக்கப்ட்டுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் எதிர்வரும் 09.06.2024ல் நடைபெறவுள்ளது.
07.06.2024 அன்று முதலாம் நாள் வெள்ளிக்கிழமை தற்போதுள்ள மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து, காலை 8.00 மணிக்கு ஊர்வலம் ஆரம்பித்து, 10 மணியளவில் புதிய மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தை சென்றடைந்து கிரியாரம்பம் நடைபெறும்.
08.06.2024 இரண்டாம் நாள் சனிக்கிழமை எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்று, மாலை 4.00 மணிக்கு பூசை இடம்பெறும். இதனைத் தொடர்ந்து 09.06.2024 அன்று ஞாயிற்றுக்கிழமை குப்பாபிஷேகம் நடைபெற்று அன்றைய தினம் அன்னதானமும் வழங்கப்படும்.
Comments
Post a Comment