கனடாவில் அறிமுகமாகும் புதிய வீசா நடைமுறை..
கனடாவில் வாழ்பவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை அழைத்து வருவதற்கான சிறப்பு வீசா நடைமுறையை கனடா அறிமுகம் செய்துள்ளது.
குறித்த வீசா நடைமுறை மே மாதம் 21ஆம் திகதி முதல் நடைமுறையில் இருக்கும் என கனடா அறிவித்துள்ளது.
புதிய வீசா நடைமுறையை பயன்படுத்தி உங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியை கனடாவுக்கு அழைத்துவர ஒரு வாய்ப்பு உள்ளது.
இதன்படி, கனடாவுக்கு வரும் உங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை ஒரு நேரத்தில் 5 ஆண்டுகள் வரை கனடாவில் தங்கியிருக்க அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், உங்கள் இருப்பை கனடாவில் இருக்கும் போது நீட்டிக்கவும் முடியும் என கூறப்பட்டுள்ளது.
குறித்த விசாவிற்குத் தகுதிபெற, அவர்களுக்கு விண்ணப்பம் செய்பவர் ஒரு கனேடிய குடிமகனாக, அல்லது, நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்றவராக அல்லது பதிவு செய்யப்பட்ட புலம்பெயர்ந்தோராக இருக்கவேண்டியது அவசியம் என கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment