காத்தான்குடியில் கண் சத்திர சிகிச்சை வைத்தியசாலையை விரைவில் நிறுவுவதற்கு நடவடிக்கை.............

 காத்தான்குடியில் கண் சத்திர சிகிச்சை வைத்தியசாலையை விரைவில் நிறுவுவதற்கு நடவடிக்கை.............

சவுதி அரேபிய நாட்டின் அல்-பஸர் பவுண்டேஷனின் முழு ஒத்துழைப்புடன் ஜெம்மியத்துஸ் ஸபாப் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கண் சத்திர சிகிச்சை முகாம் (15) காத்தான்குடி தள வைத்தியசாலையில் இடம்பெற்றது.

நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த சுமார் ஆயிரம் கண் நோயாளர்களுக்கு இலவசமாக சத்திர சிகிச்சை வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சரும், முன்னாள் ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் பங்கேற்று உரையாற்றிய போது  மிக விரைவில் காத்தான்குடி தள வைத்தியசாலையுடன் இணைந்தாக அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட கண் சிகிச்சை வைத்தியசாலை ஒன்றை சவுதி அல்-பஸர் மற்றும் ஜெம்மியத்துஸ் ஸபாப் நிறுவனங்களின் முழு ஒத்துழைப்புடன் நிறுவுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அத்துடன் சத்திர சிகிச்சை இடம் பெறும் பிரிவிற்கு முன்னாள் அமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் நேரில் சென்று பார்வையிட்டார்.




Comments