வாகரையில் சட்டவிரோதமாக கசிப்பு தயாரித்த மூவர் கைது.............

 வாகரையில் சட்டவிரோதமாக கசிப்பு தயாரித்த மூவர் கைது.............

வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு தயாரித்த மூவர்  (11) கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிகந்தை இராணுவ புலனாய்வுப் பிரிவினர், தமக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கதிரவெளி விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோதே சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 300 லீற்றர் கசிப்பு, கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ஒன்பது பீப்பாய்கள், செப்புக் கம்பிகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த மூவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments