கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிறுவர் சபையின் இரண்டாம் காலாண்டிற்கான கூட்டம்..............

 கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிறுவர் சபையின் இரண்டாம் காலாண்டிற்கான கூட்டம்..............

மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிறுவர் சபையின் இரண்டாம் காலாண்டிற்கான கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில்  (17) நடைபெற்றது.

மேற்படி கூடட்டமானது கோறளைப்பற்று பிரதேச செயலக சிறுவர் சபையின் தலைவர் வி.அரோஜன் தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் செறின் தன்னார்வ தொண்டு நிறவனத்தினால் கிழக்கு மாகாண ரீதியில் மகளீர் பிரிவினருக்கென நடாத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுப் போட்டியில் பங்கு பற்றி மாகாண ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டவர்கள் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வெற்றிக் கேடயத்தினை பிரதேசசெயலாளரிடம் கையளித்து பெருமையடைந்தனர்.

இதே போன்று மாவட்ட ரீதியில் 2ஆம் இடத்தினை பெற்றுக்கொண்ட ஆண்கள் பிரிவினரும் தங்களது வெற்றிக்கோப்பையை கையளித்தனர். இவர்களது சாதனையை பிரதேச செயலாளர் பாராட்டியதுடன் அவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார். அத்துடன் பெண்களுக்கான காலணிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இக் கூட்டமானது பிரதேச செயலாளர்  ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் வழிகாட்டுதலில் பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் அ.அழகுராஜினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று பிரதேச செயலாளர்  ஜெயானந்தி திருச்செல்வம் உட்பட பிரதேச செயலகத்தின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வானது வேள்ட் விஷன் நிறுவனத்தின் அனுசரனையுடன் செறின் நிறுவனம் மற்றும் உள நலம் நிலையத்தின் பங்களிப்புடன் மேற்படி சிறுவர் சபையின் இரண்டாம் காலாண்டிற்கான கூட்டம் நடைபெற்றது.


Comments