மட்டு. மாவட்ட சுகாதாரசேவைகள் பணியகத்தினால் சுகாதார மேம்பாட்டு வலுப்படுத்தும்நிகழ்ச்சி திட்டம் முன்னெடுப்பு.....

 மட்டு. மாவட்ட சுகாதாரசேவைகள் பணியகத்தினால் சுகாதார மேம்பாட்டு  வலுப்படுத்தும்நிகழ்ச்சி திட்டம் முன்னெடுப்பு.....

மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணியகத்தினால் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சுகாதார மேம்பாட்டு பாடசாலைகளை வலுப்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு செயல்பாடாக மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள சுகாதார மேம்பாட்டு பாடசாலைகளை எவ்வாறு வலுப்படுத்துவது தொடர்பான இரண்டு நாள் பயிற்சி பட்டறை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் ஆரம்பமானது.

சுகாதார மேம்பாட்டு பிரிவு மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் முரளிஸ்வரன் தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பாடசாலை சிகிச்சையாளர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், பொது சுகாதார மருத்துவ மாதுக்கள், ஆரம்பப் பிள்ளை பராய பராமரிப்பு உத்தியோகத்தர்கள், பாலர் பாடசாலை பணியக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Comments