மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குப்பட்ட சிறுவர் கழகங்களின் சிறுவர் சபைக் கூட்டம்.............
மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குப்பட்ட சிறுவர் கழகங்களின் சிறுவர் சபை கூட்டம் (15) மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில், மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களினால் செயல்படுத்தப்பட்டு வருகின்ற மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிக்குப்பட்ட சிறுவர் கழகங்களின் சிறுவர் சபை கூட்டம் சிறுவர் சபை தலைவர் பீ.சஞ்சய் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் சிறுவர் சபையினால் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
சிறுவர் உரிமை, சிறுவர் பாதுகாப்பு சிறுவர் கழகங்களின் செயற்பாடுகள் எதிர்கால வேலை திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் பிரதேச சிறுவர் சபைகளை ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர் கழக உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இன்று இடம்பெற்ற சிறுவர் சபை கூட்ட நிகழ்வில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் அருட்செல்வம், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அழகுராஜ்இ நிரோஷன் மற்றும் பிரதேச சிறுவர் சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment