மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம்..........

 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம்..........

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பங்கு பற்றுதலுடன் விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
2016, 2017 ஆண்டு காலப்பகுதியில் மாவட்ட அபிவிருத்தி குழுவினால் அனுமதி வழங்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஏற்பட்டுள்ள சவால்கள் தொடர்பாக இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
மாவட்டத்தில் நீர் வாழ் உயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு ஆரம்ப கட்டமாக 239 எக்கர் காணியில் மீன், இறால் வளர்ப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இவ் கலந்துரையாடலில் அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச பிரிவின் இறால் பண்ணை, மீன் வளர்ப்பு மற்றும் கொக்கட்டிச்சோலை இறால் பண்ணை தொடர்பாகவும் கலந்துரையாடபட்டதுடன், நீர் வாழ் உயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கான காணிகளை வழங்குவதற்கான நேர்முக தேர்வினை மேற்கொள்ளுமாறு ஆளுநர் இதன் போது அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியதுடன், மக்களின் நலன் கருதி அபிவிருத்தி செயற்திட்டங்களை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் களப்பினை தூர்வாருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வது, முகத்துவாரத்தில் அமைந்துள்ள கலன்கரை விளக்கு, மற்றும் மீன் சந்தையை புணர்நிர்மானம் மேற் கொள்வதற்கான நிதி ஒதுக்கிடு வழங்குவதற்கு நடவடிக்கை மேற் கொள்வதற்கான உத்தரவுகள் ஆளுநரினால் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந், மேலதிக அரசாங்க அதிபர் நவருபரஞ்சினி முகுந்தன் (காணி), வாகரை பிரதேச செயலாளர் ஜி. அருணன், மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரின் பிரத்தியோக செயலாளர் த.தஜீவரன், எந்திரி துளசிதாசன், மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Comments