கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி ரன்விமன வீடமைப்பு திட்டத்தில் இரண்டு வீடுகள் பயனாளியிடம் கையளிப்பு........

 கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி ரன்விமன வீடமைப்பு திட்டத்தில் இரண்டு வீடுகள் பயனாளியிடம் கையளிப்பு........

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி ரன்விமன வீடமைப்பு திட்டத்தில் இரண்டு வீடுகள் இன்று (16) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.                      இந்நிகழ்வானது கோறளைப்பற்று மத்தி  பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் நடைபெற்ற,  இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு,  மாவட்ட பிரதம கணக்காளர் எம்.எஸ்.பசீர், உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ரமீசா, மாவட்ட செயலக சிரேஸ்ட  முகாமையாளர் ஜே.எப்.மனோகிதராஜ், பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.பசீர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எல்.ஏ.மஜீத், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .

இதனைத் தொடர்ந்து கோறளைப்பற்று மத்தி ஓட்டமாவடி கிழக்கு சமுர்த்தி வங்கியினால்  கடன் வழங்கும் நிகழ்வும்,   நிலையான சேமிப்பை வைப்பில் இடுதல் நிகழ்வும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

முன்னைய வீடு.....

தற்போதைய வீடு.....










 

 

Comments