வாழைச்சேனையில் "போதைப் பொருள் ஒழிப்பு” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு..............

 வாழைச்சேனையில் "போதைப் பொருள் ஒழிப்பு” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு..............

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேசத்தில் “போதைப் பொருள் ஒழிப்பு" தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் போதைப் பொருள் தடுப்பு மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் 206/C பிறைந்துறைச்சேனை பகுதியில் போதைப் பொருள் பாவனையைக் கைவிடுதல் மற்றும் அதிலிருந்து தப்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது புகைத்தல் தடுப்பு தொடர்பான ஸ்டிக்கர், துண்டுப் பிரசுரங்கள் என்பன பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Comments