இலங்கை தேசிய கபடி அணிக்கு மட்டக்களப்பு வீராங்களைகள் தெரிவு.....
இலங்கை தேசிய கபடி அணிக்கு தெரிவாகி சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்பங்கேற்பதற்காக மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தை சேர்ந்த 03 வீராங்கனைகள் தெரிவாகியுள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் நேபாளத்தில் நடைபெறவுள்ள கபடி போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை தேசிய கபடி அணிக்குழுவில் தெரிவாகியுள்ள இவர்கள் மூவரும் மட்டக்களப்பு கிரான் மற்றும் கோரகல்லிமடுவை சேர்ந்த வீராங்கனைகள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்
இதில் கோரகல்லிமடு கணேஷ் விளையாட்டுக் கழக கபடி அணி வீராங்கனையும், மட்/ககு/கோரகல்லிமடு ஸ்ரீ ரமண மகரிஷி வித்தியாலைய உடற்கல்வி ஆசிரியருமான கோகலிகா அவர்களும், கிரானை சேர்ந்த மட்/ககு/ கிரான் மத்திய கல்லூரியின் பழைய மாணவிகளும், கிரான் கருணா ஐக்கிய விளையாட்டு கழக வீராங்கனைகளுமான சு.கஜேந்தினி மற்றும் S.சிந்துஜா ஆகியோரும் தெரிவாகி உள்ளனர்.
இவர்கள் தற்போது எமது மட்டக்களப்பு மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளது. எனவே அவர்களுக்கான பயிற்சிகளை வழங்கிய பயிற்றுவிப்பாளர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வோம் இவர்களை நீங்களும் வாழ்த்துங்கள்.
Comments
Post a Comment