மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் சாதனை மாணவர்கள் கௌரவிப்பு .........
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியிலிருந்து சர்வதேச ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவாகியுள்ள மாணவர்கள் மற்றும் கிரிக்கட் சுற்றுப்போட்டியில் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்ட அணிவீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு (27) நடைபெற்றது.
சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் இலங்கையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்று சர்வதேச போட்டிக்கு செல்லும் ஏம்.ஜே.ஆரீஸ், பி.பிரகிதீஸ் மற்றும் கிரிக்கட் சுற்றுப்போட்டியில் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்ட 15வயதுக்குட்பட்ட கடினபந்து கிரிக்கட் அணியினர் கௌரவிக்கப்பட்டனர்.
கௌரவிப்பு நிகழ்வு கல்லூரி அதிபர் ஆர்.பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதன் போது சாதனை படைத்த மாணவர்கள், பெற்றோர் அவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்கள் பேண்ட் வாத்தியங்களுடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு பாடசாலையின் வில்லியம் ஓல்ட் ஒன்றுகூடல் மண்டபத்தில் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
Comments
Post a Comment