மாவடிவேம்பு உளநல புனர்வாழ்வு நிலையத்தில் பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்வுகள்....................
மட்டக்களப்பு மாவடிவேம்பு உளநல புனர்வாழ்வு நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக அபிவிருத்தியை நோக்காக கொண்ட உளநல மேம்பாட்டுக்கான செயற்றிட்டத்தின் ஒன்றாக சித்திரை புதுவருடம் மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றது.
மாவடிவேம்பு உளநல புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்வு உளநல புனர்வாழ்வு நிலைய பொறுப்பதிகாரி வைத்தியர் ஜூடி ரமேஷ் ஜெயக்குமார் தலைமையில் இடம்பெற்றதோடு, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் முனீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
உளநல புனர்வாழ்வு நிலைய பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் கோகிலா இந்திரன், உளநல புனர்வாழ்வு நிலைய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர. நிகழ்வில் பிரதம அதிதிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், மரங்களும் நாட்ப்பட்டன.
Comments
Post a Comment