மட்டக்களப்பில் வன்முறை தீவிரவாதத்தை தடுத்தல் தொடர்பில், இரு நாள் செயலமர்வு...............
வன்முறை தீவிரவாதத்தை தடுக்க இளைஞர்களின் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்தல் தொடர்பாக உயர் தொழில் நுட்பவியல் நிறுவன மாணவர்களுக்கான இருநாள் செயலமர்வு மட்டக்களப்பு உயர்தொழில் நுட்பவியல் நிறுவனத்தில் நடைபெற்றது.
தன்னார்வ தொண்டு நிறுவனமான லிப்ட் நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்து வருகின்ற செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக, பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர் யுவதிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
எல் விடாஸ் நிறுவனத்தின் நிதி உதவியில் லிப்ட் நிறுவனத்தின் அனுசரணையில் நிறுவன பணிப்பாளர் ஜானு முரளிதரன் தலைமையில் இச் செயலமர்வு நடைபெற்றது.
செயலமர்வில் லிப்ட் நிறுவனத்தினால் பயிற்றுவிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டனர்
Comments
Post a Comment