வவுணதீவில், நிறுவை அளவு கருவிகளுக்குமுத்திரை பதிக்கும் வேலைத்திட்டம்.....

வவுணதீவில், நிறுவை அளவு கருவிகளுக்குமுத்திரை பதிக்கும் வேலைத்திட்டம்.....

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் வியாபார நிலையங்களில் உள்ள நிறுவை அளவு கருவிகளுக்கு முத்திரை பதிக்கும் வேலைத்திட்டம் தெடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

வவுணதீவு – செயலக வளாகத்தில் இடம்பெறும் இச் செயற்பாட்டில், தமது நிறுவை அளவு கருவிகளைக் கொண்டு வரும், வியாபாரிகள் அவற்றிற்கான முத்திரைகளைப் பதித்துச் சென்றனர்.

 நிறுவை அளவு கருவிகளுக்கு முத்திரை பதிக்கும் வேலைத்திட்டம், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தொடர்ச்சியாக  முன்னெடுக்கப்படவுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் பரிசோதகர் நீலெவெல, அளவீட்டு சேவைகள் உதவியாளர் இப்ஹாம் போன்றோர் இச்சேவையில் ஈடுபட்டிருந்தனர்.

Comments