மட்டக்களப்பில் மணல் வீதிகள் கிரவல் வீதிகளாக மாற்றப்படுகின்றன........

 மட்டக்களப்பில் மணல் வீதிகள் கிரவல் வீதிகளாக மாற்றப்படுகின்றன........


மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், அத்தியாவசிய மணல் வீதிகள் கிறவல் வீதிகளாக மாற்றும் திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட வீதி  மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் சிந்தனைக்கு அமைவாக மணல் வீதிகள் அற்ற கிராமங்கள் என்னும் கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன.

மாவட்ட செயலகத்தின் திட்டமிடலில், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கண்காணிப்பில், பனிச்சையடி படித்த பெண்கள் பண்ணை வீதி கிரவல் வீதியாக மாற்றப்பட்டது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்ற வீதி கையளிக்கும் நிகழ்வில், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

நிகழ்வில் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Comments