வயோதிபர் இல்லங்களுக்கான சக்கர நாற்காலி மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு..............

 வயோதிபர் இல்லங்களுக்கான சக்கர நாற்காலி மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு..............

 உலக அன்னையர் தினத்தை  முன்னிட்டு   கிழக்கு மாகாண சமூக சேவை அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வயோதிபர் இல்லங்களுக்கான சக்கர நாற்காலி மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு உளநல வைத்தியர் Dr ரமேஷ் தலைமையில் இடம் பெற்றது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில்  உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு பல்வேறு சமூக நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது,   இதே வேளை கிழக்கு மாகாண சமூக சேவை அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வயோதிபர் இல்லங்களுக்கான சக்கர நாற்காலி மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (12) மட்டக்களப்பு  திறனியம் திறந்த பாடசாலை கற்றல் நிலையத்தில் உளநல வைத்தியர் Dr ரமேஷ் தலைமையில் இடம் பெற்றது. 

இன்றைய இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  ஜே.ஜே.முரளிதரன் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட இல்லங்களுக்கு சுமார் 30 லட்சம் ரூபா பெறுமதியான சக்கர நாற்காலி  மருத்துவ உபகரண தொகுதிகளை வழங்கி வைத்தார்.  இன்றைய இந்த நிகழ்விற்கு அரச உயர் அதிகாரிகள் அரசு சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் வயோதிபர் இல்லங்களுக்கான பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



Comments