காத்தான்குடி பிரதேச செயலகத்தில் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான விசேட தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு...............
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான விசேட தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு...............
கல்வி அமைச்சும் திறன் அபிபிவிருத்தி அமைச்சும் இணைந்து க.பொ.த உ/த மாணவர்களுக்கான விசேட தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் (SKILL VISTA) நாடு பூராகவுமுள்ள பிரதேச செயலகங்களில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இந் நிகழ்ச்சி திட்டத்தில் மீரா பாலிகா மகளிர் வித்தியாலயம் மற்றும் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டதுடன் இக்கருத்தரங்கு மார்ச் 5ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 2 மாதங்கள் அப்பாடசாலையில் உள்ள வளவாளர்களைக் கொண்டு 200 மாணவர்களுக்கு நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் கணனி, ஆங்கிலம் மற்றும் தொழில் வழிகாட்டல் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இப்பயிற்சி நெறியின் இறுதி நாள் கௌரவிப்பு நிகழ்வு 2024.05.02 ஆந் திகதி மீரா பாலிகா மகளிர் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.சுரேந்திரன் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்கள் மற்றும் வளவாளர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
Comments
Post a Comment