கொக்கட்டிச்சோலை பகுதியில் வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்.............
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள வால்க்கட்டு பகுதி முதல் மணற்பிட்டி வரையான வீதி புனரமைப்பிற்கான ஆரம்ப நிகழ்வு (16) இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், கமநல சேவை திணைக்கள உதவி பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர், திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைப்புகளின் தலைவர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த வீதியானது 85 மில்லியன் ரூபா செலவில் 1.69 கிலோமீட்டர் நீளமுள்ளதாக புனரமைப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த வீதியின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பித்து வைக்கும் முகமாக கொங்கிறீட் இடும் பணியினை இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் ஆரம்பித்து வைத்தார்.
விவசாயிகள் அதிகளவாக பயன்படுத்தப்படும் இந்த வீதியானது கடந்த 40 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படவில்லை என்பதுடன், குறித்த வீதி புனமைக்கப்படுமிடத்து 2,000 இற்கு மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நன்மையடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment