கிழக்கு மாகாண புதிய இராணுவ கட்டளைத்தளபதிக்கும் மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்குமிடையில் விசேட சந்தித்திப்பு................

 கிழக்கு மாகாண புதிய இராணுவ கட்டளைத்தளபதிக்கும் மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்குமிடையில் விசேட சந்தித்திப்பு................

கிழக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.குலதுங்க மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஆகியோருக்கிடையிலான சினேகபூர்வமான சந்திப்பு (13) காலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான இராணுவக் கட்டளைத் தளபதியாக கடந்த ஏப்ரல் மாதம் 25ஆந் திகதி புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.குலதுங்க வைபவரீதியாக அரச உயர் அதிகாரிகளை சந்தித்தல் மற்றும் மதஸ்தலங்களை தரிசித்து சமயத் தலைவர்களிடம் ஆசீர் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த சந்திப்பு அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன் போது மாவட்டத்தில் நிலவும் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக இருவருக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன் போது மட்டக்களப்பு கல்லடி 243வது இராணுவ படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சந்திமால் குமாரசிங்க உள்ளிட்ட இராணுவ உயர் அதிகாரிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

Comments