காத்தான்குடியில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் மற்றும் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா...............

 காத்தான்குடியில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் மற்றும் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா...............

புதிய காத்தான்குடி சமுர்த்தி வங்கி மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நோன்புப் பெருநாள் மற்றும் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா (27) காத்தான்குடி கடற்கரை வில்லா மறைன் முன்பாக இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, கணக்காளர் கே.சித்ரா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.தனூஜா, தேசிய இளைஞர் சேவை மன்ற அதிகாரி, காத்தான்குடி தேசிய பாடசாலையின் அதிபர் நிஹால் அஹமட் பொலிஸ் நிலைய அதிகாரி ஜவாஹிர் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்டனர்.
விஷேட அதிதிகளாக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ் காத்தான்குடி சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.ஏ.எம்.சுல்மி ஏனைய முகாமையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர் சேவை மன்ற உறுப்பினர்கள் மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டுக்களான மரதன் ஓட்டம், தலையணைச்சமர், கயிறு இழுத்தல், யானைக்கு கண் வைத்தல், சங்கீத கதிரை, முட்டி உடைத்தல், சாக்கோட்டம், பந்து மாற்றுதல் , சீனடி சிலம்படி, பலூன் ஊதி உடைத்தல் போன்ற விளையாட்டுகள் இடம்பெற்றதுடன் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வின் சுவாரஷ்ய நிகழ்வாக மர்ம மனிதன் கண்டுபிடித்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதனை கண்டு பிடித்த மர்ம மனிதன் தெரிவு செய்தவருக்கு குலுக்கல் முறையில் பிரதேச செயலாளரினால் பரிசு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Comments