இல்லாதோருக்கு உதவுவோம் BattiEye கட்டிக் கொடுத்த புதிய வீட்டை பயனாளிக்கு கையளித்தார் சண். தங்கராஜா.....

 இல்லாதோருக்கு உதவுவோம் BattiEye கட்டிக் கொடுத்த புதிய வீட்டை பயனாளிக்கு கையளித்தார் சண். தங்கராஜா.....

BattiEye இணையதளம் மற்றும் யூடியூப் சனலின் ஊடாக அன்மைக்காலத்தில் சமூக  சேவை வேலைத்திட்டங்கள் முன்னேடுத்து வருகின்றன. இதன் அடிப்படையில் இல்லாதோருக்கு உதவுவோம் எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக பலரிடம் உதவி பெற்று  தேவையுடையோருக்கு உதவி வருகின்றது .

இதன் அடிப்படையில் இன்று (29) மட்டக்களப்பு கல்லடியில் உள்ள ஒரு குடும்பத்திற்கு ஒரு புதிய வீட்டை அமைத்துக் கொடுத்து, இலங்கை மதுவரி உதவி  ஆணையாளர்  சண்முகம் தங்கராஜா அவர்களால்  உரிய பயனாளியான யூஜின் மைக்கல் ரெடாரண்ஸ் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இதற்கான ஒரு பகுதி பணத்தினை இலங்கை மதுவரி உதவி  ஆணையாளர்  சண்முகம் தங்கராஜா அவர்களால் வழங்கப்பட்டதுடன் புலம்பெயர்ந்து வாழும் நல் உள்ளங்கள் மூலமும் கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு டச்பார் இஞ்ஞாசியார் ஆலய பங்குத்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்.






Comments