மட்டு இந்துக்கல்லூரியின் நீண்ட கால மின்சார பிரச்சினைக்கு தீர்வு கண்ட Batti இந்துக்கல்லூரி OBA மாணவர்கள்......

மட்டு இந்துக்கல்லூரியின் நீண்ட கால மின்சார பிரச்சினைக்கு தீர்வு கண்ட Batti இந்துக்கல்லூரி OBA மாணவர்கள்......

  மட்டக்களப்பு இந்துக்கல்லூரி பாடசாலையில் நீண்ட கால பிரச்சினையாக இருந்து வந்த மின்சார கட்டணம் அதிகரிப்பு தொடர்பான பிரச்சனைக்கு மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் ஒரு நிரந்தரமான தீர்வை பெற்றுக் கொடுத்துள்ளது. 

மின்சார கட்டணம் அதிகரித்து செல்வதன் காரணத்தால் அதை செலுத்துவதில் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்குவதாக பாடசாலையின் அதிபர்,  பழைய மாணவர் சங்கத்துக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பாரிய முயற்சியின் மூலம் 20KW அளவிலான Solar Panel  பொருத்தப்பட்டு இன்று (31.05.2024) க‌ல்லூ‌ரி சமூகத்தினரிடம் பழைய மாணவர் சங்கத்தினர் உத்தியோக பூர்வமாகக் கையளித்தனர்.

மேற்படி செயற்றிட்டத்துக்குத் தேவையான பெரும்பகுதி நிதியுதவியானது இந்துக்கல்லூரியன்  பழைய மாணவர் சங்க கனடிய கிளையினாலும், மிகுதி பணமானது  கல்லூரியின் பழைய மாணவர்களாலும், புலம் பெயர்ந்து வாழும் பழைய மாணவர்களாலும் வழங்கப்பட்டது குறிப்பிடத்த விடயமபகும்.

இந்நிகழ்வில் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க தலைவர் M.சதீஸ்குமார், செயலாளர் R.சிவநாதன், உபதலைவரான S.ரஜனிகாந் மற்றும் உறுப்பினர்கள் அதிபர் K.பகீரதனிடம் ஆவண கோவையை கையளித்து இருந்தனர்.






Comments