கணித ஒலிம்பியாட் போட்டியில் புனித மிக்கேல் கல்லூரியின் 8 மாணவர்கள் வெளிநாடு செல்லவுள்ளனர்......

 கணித ஒலிம்பியாட்  போட்டியில் புனித மிக்கேல் கல்லூரியின் 8 மாணவர்கள்  வெளிநாடு செல்லவுள்ளனர்......

2024ம் ஆண்டின்  நடைபெற்ற கணித ஒலிம்பியாட் விநாடி வினா போட்டியில் மட்டக்களப்பு, புனித மிக்கேல் கல்லூரியின் 8 மாணவர்கள் தேசிய மட்டத்தில்  தெரிவாகி, வெளிநாடு செல்லவுள்ளனர்.  மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து முதல் தடவையாக அதிக எண்ணிக்கையான மாணவர்கள் ஒரே பாடசாலையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக இதுவாகும்.

 வலய மட்ட போட்டியில் 60 மாணவர்கள் பங்கு பற்றி, மாவட்ட மட்ட போட்டிக்காக அந்த 60 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். மாகாண மட்ட போட்டிக்காக 24 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, அதிலிருந்து 16 மாணவர்கள் தேசிய மட்ட போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தனர். தற்போது தேசிய மட்ட போட்டியிலே 8 மாணவர்கள் கணித ஒலிம்பியாட் விநாடி வினாப் போட்டியில் தெரிவு செய்யப்பட்டு, சர்வதேச ரீதியில் நடைபெறும் கணித ஒலிம்பியாட் விநாடி வினாப் போட்டிக் குழாமில் இடம் பிடித்துள்ளனர். இவ்வாறு தம் திறமைகளை வெளிக்கொணர்ந்த  மாணவர்கள்  அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவிப்பதுடன், இவர்களை பயிற்றுவித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.






Comments