லேக் வியூ டெனிஸ் சென்டரின் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு டெனிஸ் சுற்றுப் போட்டி.................
மட்டக்களப்பு லேக் வியூ டெனிஸ் சென்டரின் (Lake View Tennis) 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் Batticaloa Tennis Training Center - Junior Ranging Tennis சுற்றுப் போட்டியொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு லேக் வியூ டெனிஸ் சென்டரின் தலைவர் நாகரெட்ணம் ஜனன் தலைமையில் இடம் பெற்ற இச் சுற்றுப்போட்டியானது இலங்கை டெனிஸ் சம்பேளத்தினால் (Sri Lanka Tennis Association) ஒழுங்குபடுத்தலின் கீழ் மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் 100 இற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றிய சிறார்களுக்கான இச்சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு, கொழும்பு, அம்பாரை, நீர்கொழும்பு மற்றும் குறுநாகல் உள்ளிட்ட பிரதேசங்களில் இருந்து அதிகளவிலான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் சவால்மிக்க போட்டிகளாகவும் அமைந்திருந்து.
25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இவ்வருடத்தில், இலங்கை டெனிஸ் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பல போட்டிகளை நடாத்துவதற்க திட்டமிடப்பட்டள்ளது. அதன்படி இவ்வருடத்தின் இரண்டாவது போட்டியாகும் இச் சுற்றுப் போட்டிக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக மாவட்ட செயலாளர் சுதர்சனி ஸ்ரீகாந் கலந்து கொண்டதுடன், குறித்த நிகழ்விற்கு விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்பரன் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரும் TABயின் செயலாளருமான கென்னடி மற்றும் லேக் வியூ டெனிஸ் சென்டரின் செயலாளர் நு.தர்சன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.
இந்த லேக் வியூ டெனிஸ் சென்டரானது 1999 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், பலரின் அர்ப்பணிப்பிற்கு மத்தியில் 25 வது ஆண்டினை பூர்த்தி செய்துள்ளதுடன். சர்வதேச ரீதியில் டெனிஸ் மூலமாக சாதனை படைக்கும் வீரர்களையும், பல பயிற்றுவிப்பாளர்களையும் இந்த கழகமானது உருவாக்கியுள்ளமை தமக்கு பெருமையளிப்பதுடன், இன்னும் ஜம்பது நூறு வருடங்களை கடந்து தமது சென்டரின் சாதனைப் பயணம் தொடருமெனவும் இதன் போது மட்டக்களப்பு லேக் வியூ டெனிஸ் சென்டரின் தலைவர் நாகரெட்ணம் ஜனன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment