வெபர் கிண்ண கூடைபந்தாட்டம் -2024.....
வணபித வெபர் அடிகளாரின் ஞாபகார்த்தமாக மாபெரும் கூடைபந்தாட்ட சுற்றுப்போட்டியை மட்டக்களப்பு மைக்கல்மென் விளையாட்டு கழகம் நடாத்தவுள்ளது.
மைக்கல்மென் விளையாட்டு கழகத்தின் 75வது வருட நிறைவை முன்னிட்டு இவ் மாபெரும் கூடைபந்தாட்ட போட்டியானது எதிர்வரும் 23, 24, 25 மற்றும் 26ம் திகதிகளில் புனித மிக்கல் கல்லூரியில் அமைந்துள்ள வணபித ஹெர்பட் உள்ளக கூடைபந்தாட்ட அரங்கிலும், தன்னாமுனை மியானி கூடைபந்தாட்ட உள்ளக அரங்கிலும் நடாத்தப்படவுள்ளன.
முதலிடத்தை பெற்றுக்கொள்ளும் அணிக்கு ஒரு லட்சம் ரூபாய் பணப்பரிசும், இரண்டாமிடத்தை பெறும் அணிக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பணப்பரிசிலும், மூன்றாவது இடத்தினை பெறும் அணிக்கு இருபத்திஐயாயிரம் பணப்பரிசிலும் வழங்கப்படவுள்ளது.
Comments
Post a Comment