மட்டு அரச அதிபருக்கான கிரிக்கெட் தொடரில் மட்டு மாவட்ட A அணியினர் 2ம் சுற்றுக்கு தெரிவு....

 மட்டு அரச அதிபருக்கான கிரிக்கெட் தொடரில் மட்டு மாவட்ட A அணியினர் 2ம் சுற்றுக்கு தெரிவு....

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் 2024ம் ஆண்டுக்கான ஆண்கள் கிரிக்கெட் வெற்றிக்கிண்ணத்திற்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலக A அணியினர் 2ம் சுற்றுக்கு தெரிவாகி உள்ளனர். 

07ம் திகதி திருப்பெருந்துறை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இவர்கள் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ளனர்.

60க்கும் மேற்பட்ட அரச திணைக்களங்களின் அணிகளை உள்ளடக்கிய மேற்படி தொடரில்,  1ம் சுற்றுக்கான D குழுவின் போட்டியில் மாவட்ட நீதிமன்ற A அணி, செங்கலடி பிரதேச செயலக அணியினரை மட்டக்களப்பு மாவட்ட செயலக அணியினர் வீழ்த்தி 2ம் சுற்றிற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Comments