ஏறாவூர்பற்று சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் இரத்ததான நிகழ்வு மே - 15.........
தற்போதைய காலகட்டத்தில் இரத்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணத்தால் ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தின் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் ஏற்பாட்டில் மே - 15 அன்று மாபெரும் இரத்ததான நிகழ்வை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரத்தின் வழிகாட்டலில் கீழ், ஏறாவூர்பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் கே.இராசலிங்கத்தின் ஓழுங்கமைப்பில், ஏறாவூர்பற்று சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பினர் இவ்இரத்ததான நிகழ்வை ஏற்பாடு செய்து ஏறாவூர் பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நாமும் இவ்இரத்ததான நிகழ்வில் இணைந்து ஓர் உயிரை காப்பதற்கு உதவுவோம் வாரீர்.........
Comments
Post a Comment