மட்டக்களப்பு கிரிக்கெட் அபிவிருத்தி சபையின் T/20 போட்டி..............
மட்டக்களப்பு கிரிக்கெட் அபிவிருத்தி சபையினால், மாவட்ட ரீதியில் நடாத்தப்பட்ட 20/20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி 28 மாலை நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் பாசிக்குடா சாக் மற்றும் சிங்கிங் பிஷ் அணியினர் மோதிக் கொண்டனர். முதலில் துடுப்பெடுத்தாடிய பாசிக்குடா சாக் அணி அனைத்து இலக்குகளையும் இழந்து 133 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிங்கிங் பிஷ் அணி இருபதாவது பந்து பரிமாற்றத்தில் ஒரு பந்து மீதமிருக்க, வெற்றி இலக்கை அடைந்து கிண்ணத்தை சுவீகரித்தது. கிண்ணத்தை சுவீகரித்த சிங்கிங் பிஷ் அணிக்கு 10 இலட்சம் ரூபா பணப்பரிசிலும், இரண்டாம் இடத்தை பெற்ற பாசிக்குடா சாக் அணிக்கு 7 இலட்சம் ரூபா பணப்பரிசில்களும், இச்சுற்றுப் போட்டியில் மூன்றாவது இடத்தை பெற்ற, கொக்கட்டிச்சோலை அணிக்கு 5 இலட்சம் ரூபா பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன.
இறுதிப் போட்டி நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் அனுச நாணயக்கார உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
Comments
Post a Comment