களுவங்கேணிப் பிரதேசத்தில் பாம்பு தீண்டியதில் மூதாட்டி உயிரிழந்துள்ளார்..............
மட்டக்களப்பு களுவங்கேணிப் பிரதேசத்தில் பாம்பு தீண்டியதில் 76 வயதுடைய மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
களுவன்கேணி கிராமத்தைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தாயான சின்னத்தம்பி கற்பகம் என்பவரே உயிரிழந்தவராவர். தனது வீட்டிற்கருகிலுள்ள காணியைத் துப்பரவு செய்து கொண்டிருந்த வேளை பாம்புக் கடிக்கு இலக்காகியுள்ளார்.
சிகிச்சைக்காக செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை மூதாட்டி உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.
திடீர் மரண விசாரணையதிகாரி எம்.எஸ்.எம்.நஸிர் மரண விசாரணைகளை மேற்கொண்டார். ஏறாவூர்ப்பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Comments
Post a Comment