சிறப்பாக நடைபெற்ற மாங்காடு சமுர்த்தி வங்கியின் புதுவருட கிராமிய விளையாட்டு விழா................

 சிறப்பாக நடைபெற்ற மாங்காடு சமுர்த்தி வங்கியின் புதுவருட கிராமிய விளையாட்டு விழா................

 (கடோ கபு) நடளாவிய ரீதியாக  சமுர்த்தி வங்கி கிளைகளினால் அரசின் அறிவுறுத்தலுக்கு அமைய சித்திரை புத்தாண்டு கிராமிய விளையாட்டு விழா இடம்பெற்ற வகையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  மாங்காடு சமுர்த்தி வங்கிக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரை புத்தாண்டு கிராமிய விளையாட்டு நிகழ்வுகள் செட்டிபாளையம் கண்ணகி அம்மன் விளையாட்டு மைதானத்திலே 21 பிற்பகல் 2.30 மணி முதல் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர்  சிவப்பிரியா வில்வரத்னம்  தலைமையின் கீழ் மாங்காடு சமுர்த்தி வங்கி முகாமையாளர்  மகேந்திரன் சியாந்தினி அவர்களின் நெறிப்படுத்தலில் சிறந்த திட்டமிடலுடன் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இவ் விளையாட்டு நிகழ்விற்கு பல பிரமுகர்கள் அதிதிகளாக கலந்து சிறப்பித்ததுடன் பெருமளவான பொதுமங்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ் விளையாட்டு நிகழ்வில் தமிழர் பண்பாட்டியல் சார்ந்த பல விளையாட்டு நிகழ்வுகளும் கேளிக்கை விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் பெருமளவான போட்டியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கப்பட்டது.
















Comments