பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளர் சபை தெரிவு..........

பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளர் சபை தெரிவு..........

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளர் சபைத் தெரிவும், பேராளர் மாநாடும் களுவாஞ்சிகுடியில்  அமைந்துள்ள சங்கத்தின் கட்டிடத்தில் (31)  நடைபெற்றுள்ளது .

இதன்போது சங்கத்திற்குரிய பணிப்பாளர் சபை உறுப்பினருக்கான தெரிவு, தேர்தல் மூலம் இடம்பெற்றதுடன். பணிப்பாளர் சபையின் தலைவராக மே.வினோராஜ், உபதலைவராக ம.சதானேசன், மேலும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக  மா.திருநாவுக்கரசு, ப.குணசேகரன், அ.றுத்றா, ச.தனுசியா,  சு.துருபதன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் .


Comments