கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கலைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கிவைப்பு..............
கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் உதவி தேவைப்படும் சிரேஸ்ட கலைஞர்களுக்கு உதவித் தொகை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் (09) வழங்கி வைக்கப்பட்டது.
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் ஜெயானந்தி தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டு சிரேஸ்ட கலைஞர்களுக்கு காசோலைகளை வழங்கி வைத்தார்.
கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் பாரம்பரிய கலைகளில் திறமையை வெளிக்காட்டிய உதவி தேவைப்படும் கலைஞர்களுக்கு 2024 ஆண்டுக்கான உதவித் தொகை வழங்கப்பட்டது. இவ் சிரேஸ்ட கலைஞர்களினால் இலக்கிம், நாடகம், நாட்டுக்கூத்து, சிற்பம், நடனம், ஓவியம் போன்ற பாரம்பரிய துறைகளில் திறமைகளை வெளிக்காட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் கணக்காளர் ஜேர்ச் ஆனந்தராஜ், நிருவாக உத்தியோகத்தர் திருமதி.புனிதநாயகி ஜேயகுமார், கலாசார உத்தியோகத்தர் ஜே.ரதிதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment