ஐயன்கேணி விபுலானந்தபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தினால் அப்பியாசக் கொப்பிகள் வழங்கிவைப்பு..............

 ஐயன்கேணி விபுலானந்தபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தினால் அப்பியாசக் கொப்பிகள் வழங்கிவைப்பு..............

ஏறாவூர்ப்பற்று, செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் செயற்படும் ஐயன்கேணி விபுலானந்தபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தினால் தமது சங்க அங்கத்தவர்களின் பாடசாலை செல்கின்ற பிள்ளைகளுக்கான அப்பியாசக் கொப்பிகளை வழங்கிவைக்கும் நிகழ்வு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மு.அகிலேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் அ.கவிராஜ் அவர்களின் தலைமையில் ஐயன்கேணி தமிழ் மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ரூபா 50,000 ஆயிரம் பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் 40 மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
இச்செயற்பாட்டிற்கான நிதியானது ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் அவர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.கோகுலராஜன் ஆகியோரின் அனுமதிக்கமைவாக சங்க நிதி மூலம் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக கிராம அபிவிருத்திப் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.ஸப்றி ஹசன் பிரிவின் கிராம உத்தியோகத்தர், பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்க நிருவாக சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளை வழங்கி வைத்தனர்.


Comments