மட்டக்களப்பு கொக்குவிலில், சமுர்த்தி அபிமானி வர்த்தககண்காட்சி...........

 மட்டக்களப்பு கொக்குவிலில், சமுர்த்தி அபிமானி வர்த்தககண்காட்சி...........

மட்டக்களப்பு, கொக்குவிலில் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் இணைந்து, 2024 சமுர்த்தி அபிமானி வர்த்தக கண்காட்சியையும், விற்பனைச் சந்தையையும் நடைபெற்றது.

சித்திரை புதுவருட பிறப்பை முன்னிட்டு சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில், இவ் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதியாக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.ராஜ்பாபு அவர்களும் பங்கேற்றார்.

சமுர்த்தி பயனாளிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதோடு விற்பனையும் செய்யப்பட்டன. கண்காட்சியில் பங்கேற்றவர்கள் பொருட்களை ஆர்வமுடன் கொள்வனவு செய்தனர்.

உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், மாவட்ட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் J.F.மனோகிதராஜ், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டார்.





Comments