மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்............
மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் மற்றும் உதவி பிரதேச செயலாளர் ல.பிரஷாந்தன் ஆகியோரின் ஒழுங்குபடுத்துதலின் கீழ் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் (08) இரத்த தான முகம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு இவ் இரத்த தான முகாம் இடம் பெற்றது.
இவ் இரத்த தான முகாமில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பாளர் வைத்தியர் விவேகானந்தன் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதன் போது ஏராளமான பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர்கள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் குருதிக்கொடை வழங்கியிருந்தனர்.
Comments
Post a Comment