மாவடிமுன்மாரி கிராம சேவகர் பிரிவில் சமுர்த்தி திணைக்களத்தினால் இலவச மருத்துவ முகாம் முன்னெடுக்கப்பட்டது...............
மாவடிமுன்மாரி கிராம சேவகர் பிரிவில் சமுர்த்தி திணைக்களத்தினால் இலவச மருத்துவ முகாம் முன்னெடுக்கப்பட்டது...............
'நாடு தழுவிய ரீதியில் நோயாளர்கள் பராமரிப்பு' எனும் தொனிப்பொருளில் பொது மக்களின் நன்மை கருதி மண்முனை தென்மேற்கு, பட்டிப்பளை பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் நடாத்திய இலவச மருத்துவ முகாம் (05) மாவடிமுன்மாரி கிராம சேவகர் பிரிவில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மகிழடிதீவு வைத்தியசாலையின் வைத்தியர் மற்றும் வைத்திய குழுவினரும் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு ஆயுள்வேத மருத்துவமனையின் வைத்தியர்களும் வைத்திய குழுவினரும் சிறப்பாக தங்கள் சேவையினை வழங்கியிருந்தனர்.
இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர் S.சுதாகரன், முகாமைத்துவ பணிப்பாளர் S.வரதராஜன் சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்கள், அதிகளவான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment