மட்டுவில் ஆரம்பமான சமுர்த்தி அபிமானி சந்தையும் விற்பனையும்......

 மட்டுவில் ஆரம்பமான சமுர்த்தி அபிமானி சந்தையும் விற்பனையும்......

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக வருடந்தோறும் நடைபெறும் சமுர்த்தி அபிமானி சந்தை, மட்டக்களப்பு மாவட்டத்திலும் சமுர்த்தி பிரிவின் ஊடாக மிக சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 இதன் அடிப்படையில் மண்முனை பற்று பிரதேச செயலகத்தில் 08ம் திகதியாகிய இன்று மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். மன்முனைப்பற்று பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ்  அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், விற்பனையும் செய்யப்பட்டது இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும் கலந்து கொண்டார்.

மற்றுமொரு பிரதேச செயலக பிரிவான கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்திலும் பிரதேச செயலாளர் கே.சித்திரவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது, இந்நிகழ்வில் சமுர்த்தி பயனுகளின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்ட்டதுடன், விற்பனையும் இடம்பெற்றதுடன், பயனாளிகளுக்கு கடன் உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டது, இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமையாளர்கள் என  பலரும் கலந்த கொண்டனர்.

இவ் சமுர்த்தி அபிமான சந்தையானது நாடு பூராவும் இம்மாதம் 08ம் திகதி தொடக்கம் இம்மாதம் 12ம் திகதி வரை நடைபெறவுள்ளத குறிப்பிடத்தக்க விடயமாகும்.







Comments