மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சித்திரைப் புதுவருட பாரம்பரிய விளையாட்டு விழா.....................

 மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சித்திரைப் புதுவருட பாரம்பரிய விளையாட்டு விழா.....................

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சித்திரைப் புதுவருட பாரம்பரிய விளையாட்டு விழாவானது (25)ம் திகதி வெபர் மைதானத்திலும் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதியாக மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் V.ஈஸ்பரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இதில் எல்லே, கிரிக்கட், மாவுக்குள் காசு எடுத்தல், தேசிக்காய் ஓட்டம் ,சாக்கு ஓட்டம், வேக நடை ஆண்கள், பெண்கள்,கயிறு இழுத்தல், போத்தலில் நீர் நிரப்புதல், தொப்பி மாற்றுதல் ,நிலை தடுமாறுதல், அஞ்சல் ஓட்டம் போன்ற விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன.
இவ்விளையாட்டு போட்டியில் உதவி பிரதேச செயலாளர்கள், கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர்கள், நிருவாக உத்தியோகத்தர், கிராம சேவை நிருவாக உத்தியோகத்தர் உள்ளிட்ட சக அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இதில் கணக்காளர் தலைமையிலான Yellow அணியானது 82 புள்ளிகளைப் பெற்று முதலிடமும், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் தலைமையிலான Green(57), Blue(45) முறையே இரண்டாம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.
இதனை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு மண்முனை பிரதேசசெயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையில் நடந்து முடிந்த போட்டிகள் அடிப்படியில் முதல் இடத்தினை விளையாட்டுக்கழகம் தங்கம், வெள்ளி, வெண்கலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது . இரண்டாவது இடத்தினை மண்முனை நலன்புரி விளையாட்டு கழகம் 08 தங்கம், 08 வெள்ளி, 01வெண்கலம் பதக்கங்கள் பெற்றதுடன் கடல் மீன்கள் விளையாட்டு கழகம் 04 தங்கம், 04 வெள்ளி, 03 வெண்கலம் பதக்கங்கள் பெற்றுள்ளன இவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் நடைபெற்றது.






Comments