கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் இப்தார் நிகழ்வு............
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்வு பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் தலைமையில் காவத்தமுனை அபு பேங்கொட் மண்டபத்தில் (04)ம் திகதி இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதேச செயலக அபிவிருத் குழு தலைவரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அத்தாவுல்லா மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் விமர்சையாக இடம் பெற்றது.
புனித ரமழான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பிருந்து அதனை முடிவுறுத்தும் 24வது நாள் இப்தார் நிகழ்வினை கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ்.எம்.பஸீர், கோறளைப்பற்று மேற்கு உதவி பிரதேச செயலாளர் சியாஹீல் ஹக், பிரதி திட்டமிடம் பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.ரியாஸ், கணக்காளர் எம்.ஐ.சஜாத் அகமட், இப்பிரதேச திணைக்கள தலைவர்கள், கோறளைப்பற்று மத்தி பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எச். எம்.எம்.றுவைத், நிருவாக உத்தியோகத்தர், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment