தொற்றா நோய்களுக்கு எதிரான நடைப்பவனி மட்டக்களப்பில் இடம் பெற்றது...............
சுகாதார அமைச்சினால் உடற்பயிற்சி மாதம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து கிழக்கு மாகாணத்தின் பிரதான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம் இணைந்து நடாத்திய தொற்றா நோய்களுக்கு எதிரான நடைப்பவனி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் N. சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
தொற்றா நோயில் இருந்து அரச ஊழியர்களை பாதுகாக்கும் வகையிலும் உடற்பயிற்சி முக்கியத்தை உணர்த்தும் கலந்து ரையாடலும் அதன் பின்பு நடைபவனியும் இடம்பெற்றது நகரின் பிரதான வீதிகள் ஊடாக கோட்டை பூங்கா வரைநடைபவனி சென்றடைந்தது.
இந்த உடற்பயிற்சி மாத நிகழ்வுக்கு பிரதம அதிதியாகவும் வளவாளராகவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் T.சத்தியமூர்த்தி கலந்து கொண்டு உடற்பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி அரச ஊழியர்களுக்கு விளக்கங்களை வழங்கி வைத்தார்.
இன்றைய இந்த நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை அலுவலக முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் பொதுமக்கள் பலரும் இந்த நடைபாவணியில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment