நவீன முறையிலான விவசாய செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல்.............

 நவீன முறையிலான விவசாய செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல்.............

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் நவீன முறையிலான விவசாய செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (17)ம் திகதி இடம் பெற்றது.
மாவட்டத்தில் புதிய தொழில் நுட்பத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக மாவட்ட வர்த்தக கைத்தொழில் மற்றும் விவசாய சம்மேளத்தினால் பல முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 16 சர்வதேச விவசாயிகள் புரட்சிகள் தினமான இன்று குறித்த நிகழ்வு துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.
நெல் நாற்று நடுகையில் நாம் எதிர்நோக்கும் சவால்களும் நவீன தொழில்நுட்ப இயந்திரங்களின் பங்களிப்பு, இலங்கையில் வர்த்தக விவசாயத் துறையை நவீனமயப்படுத்தலில் உள்ள சவால்கள், இயந்திரத்தின் மூலம் நாற்றுகளை நடுதல், ஆளில்லா விமானங்கள் (Drone), செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தல், மாற்று சக்தி வளங்களை பயன்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக துறைசார்ந்த நிபுணர்கள் மூலமாக மாவட்ட விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளத்தின் தலைவர் பேராசிரியர் ஜயசிங்கம், மாவட்ட விவசாய பணிப்பாளர் எம். எப். ஏ. ஸனிர், மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையளர், பிரதேச செயலாளர்கள், ஏனைய பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், திணைக்கள தலைவர்கள், விவசாய அமைப்பினர்கள், தொழில் முயற்சியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Comments